News
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: வெட்டுப்புள்ளிகள் வெளியீடு

2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில், பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகளை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
இதன்படி பாடசாலை வெட்டுப் புள்ளிகளுக்கு அமைய, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களை, 6 ஆம் தரத்துக்காக பாடசாலைகளில் சேர்க்கும் செயன்முறை பின்பற்றப்படுகிறது.
அதன்படி, சிங்களம் மற்றும் தமிழ் மொழி மூலங்களுக்கான பாடசாலை வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
வெட்டுப்புள்ளிகளை www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk இலிருந்து பெறலாம்.
2023ற்கான புலமைபரிசில் பரீட்சை ஒக்டோபர் 15 நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.