செம்பியன்ஸ் கிண்ண போட்டி இலங்கையில்?
அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ள ஐசிசி செம்பியன்ஸ் கிண்ண தொடரில் பங்கேற்க இந்திய அணி அந்நாட்டுக்கு செல்லாது என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தத் தொடரில் இந்திய அணியின் போட்டிகளை ஹைபிரிட் முறையில் துபாய் அல்லது இலங்கையில் நடத்த ஐசிசியிடம் பிசிசிஐ கோர உள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
அடுத்த ஆண்டு பாகிஸ்தான் நாட்டில் ஐசிசி செம்பியன்ஸ் கிண்ண தொடர் நடைபெற உள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நியூஸிலாந்து, ஆப்கானிஸ்தான், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்க உள்ளன.
இந்திய அணி விளையாடும் போட்டிகள் அனைத்தும் லாகூரில் திட்டமிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இருந்தாலும் இந்திய அணி பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் விளையாடுமா? என்ற கேள்வி எழுந்திருந்தது.
இந்திய அரசின் முடிவை ஏற்போம் என சொல்லப்பட்டு வந்த சூழலில் இந்திய அணி விளையாடும் போட்டிகளை ஹைபிரிட் முறையில் துபாய் அல்லது இலங்கையில் நடத்த ஐசிசியிடம் பிசிசிஐ கோர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.