Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

குடிநீர் கட்டணம் குறைப்பு!

தற்போதுள்ள குடிநீர் கட்டணத்தை திருத்த அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

கடந்த ஜூலை 16ம் திகதி முதல் மின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதால், எரிபொருள், இரசாயன பொருட்கள், வட்டிக்கிரயம் போன்றவற்றின் விலை குறைப்பை கருத்தில் கொண்டு இந்த குடிநீர் கட்டண திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைவாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட நீர் கட்டணத்தை  திருத்துவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இது குறித்து அமைச்சரவை தீர்மானம் பின்வருமாறு….

தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தற்போதுள்ள நீர்க்கட்டணங்கள் 2023.08.01 அன்று தொடக்கம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. குறித்த கட்டணங்களை மீளாய்வு செய்வதற்கான கட்டணக் கொள்கை மற்றும் சூத்திரத்தை அமுல்படுத்துவதற்காக 2024.07.15 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 2024.07.16 ஆம் திகதியிலிருந்து இலங்கை மின்சார சபை மின்சாரக் கட்டணத்தை குறைத்துள்ளமையாலும், எரிபொருள், இரசாயனப் பதார்த்தங்கள் மற்றும் வட்டிக் கிரயம் போன்றவற்றின் கிரயம் குறைவடைந்திருப்பதைக் கருத்திலெடுத்து, நீர்க்கட்டணத்தை ஓரளவ வீதத்தில் குறைப்பதற்கான இயலுமை காணப்படுகின்றது. அதற்கமைய, பின்வரும் வகையில் நீர்க்கட்டணங்களைத் திருத்தம் செய்வதற்காக நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கட்டண வகுதி உத்தேச குறைக்கப்படும்  வீதம் (%)
01. சமுர்த்திப் பயனாளிகள் மற்றும் நகர்ப்புற தோட்ட வீடுகள் தவிர்ந்த வீட்டு அலகுகள்     7%
02. அரச மருத்துவமனைகள் 4.5%
03. பாடசாலைகள் மற்றும் வணக்கத் தலங்கள் 6.3%
ஒட்டுமொத்த குறைக்கப்பட்ட தொகை 5.94%

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button