Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

விவசாயிகளுக்கு அரசிடமிருந்து சென்ற அறிவிப்பு

விவசாயிகள் குறைந்த பட்ச உத்தரவாத விலையில் ஓரளவு நெல்லை அரசுக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இது விவசாயிகளின் கடமை என விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன (namal karunarathna)விவசாயிகளுக்கு அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஊடகவியலாளர்களிடம் அவர் தெரிவிக்கையில்,

“நெல் சேமிப்பு கிடங்குகள் தற்போது நெல்லை கொள்வனவு செய்ய தயாராக உள்ளன. விவசாயிகளை அரசுக்கு நெல்லை விற்பனை செய்யுமாறு வற்புறுத்த மாட்டோம்.

எனினும் குறைந்தபட்ச உத்தரவாத விலையில் ஒரு தொகை நெல்லை அரசாங்கத்திற்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இன்னும் சில நாட்களில் குறைந்தபட்ச உத்தரவாத விலை அறிவிக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யும் பணியை அரசு விரைவில் தொடங்கும் என்றார்.

அரசு கொள்முதல் செய்யும் நெல்லை குறைந்த விலைக்கு விற்காமல், கட்டுப்பாட்டு விலையை விட குறைந்த விலையில் மக்களுக்கு அரிசி வழங்க பயன்படுத்துவோம்,” என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button