Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

பாடசாலை விடுமுறை: கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

2025 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு, இலங்கை முழுவதும் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் மே 05 மற்றும் 06 ஆகிய திகதிகளில் மூடப்படும்.

கல்வி அமைச்சின் அறிவிப்பின் படி, பாடசாலைகள் மே 07 ஆம் திகதி கல்வி நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்குச் சாவடிகளாகவும், எண்ணும் மையங்களாகவும், வாக்குப் பெட்டிகள் மற்றும் பிற தேர்தல் தொடர்பான பொருட்களை விநியோகிப்பதற்கும் சேகரிப்பதற்கும் பாடசாலை வளாகங்களைப் பயன்படுத்த தேர்தல் ஆணைக்குழு விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வாக்குச் சாவடிகளாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகள் மே 04 ஆம் திகதிக்குள் கிராம அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும், மேசைகள், நாற்காலிகள், அரங்குகள் மற்றும் தேவையான வசதிகளுடன் தயாராக இருக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதற்கேற்ப மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள கல்வி வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கல்வி நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்பட்டாலும், அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல்களில் குறிப்பிடப்பட்டுள்ள படி, பாடாசாலை நேரத்திற்குப் பிறகும் ஒரு சில பாடசாலைகள் தேர்தல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button