News
கல்வி அமைச்சுக்கு கோப் குழு பிறப்பித்த உத்தரவு..!
அனைத்து தொழில் பயிற்சி நிறுவனங்கள் தொடர்பாக பொதுவான வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு கல்வி அமைச்சுக்கு கோப் குழு ஆணையிட்டுள்ளது.
தொழில் பயிற்சி நிறுவனங்கள் தொடர்பான அனைத்து நிறுவனங்களையும் நாடாளுமன்றத்தில் அழைத்து கலந்துரையாடிய போதே நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பாண்டர இவ்வானையை செயல்படுத்தினார்.
இவ்வானையை வெளியிட்ட நாடாளுமன்ற குழு கூட்டத்தில் கல்வி அமைச்சு, விளையாட்டு துறை அமைச்சு, தொழில் பயிற்சி அமைச்சு, தேசிய இளைஞர் மற்றும் தொழில் பயிற்சி நிறுவனங்கள் என அனைத்து நிறுவன உறுப்பினர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
மேலும் குறித்த கூட்டத்தின் போது ஏற்றுக்கொள்ள கூடிய எவ்வித தகவல்களும் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.