News
நீர் தட்டுப்பாடு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விடுத்த எச்சரிக்கை
தற்போதைய காலநிலை மாற்றத்தினால் நாட்டில் இன்னும் 20 வருடங்களில் பாரிய நீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக தற்போதைய சூழ்நிலையில் இந்த தருணத்தில் இருந்தே அதற்கு தயாராக இருக்க வேண்டும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
நுகேகொட அனுலா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, கல்வி முறையை மாற்றாமல் எதிர்காலத்திற்கு செல்ல முடியாதென குறிப்பிட்டுள்ளார்.