Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஷி யான் 6 கப்பல் விவகாரம்!

இலங்கைக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் கப்பல்கள் மற்றும் விமானங்கள் போன்றவற்றின் விபரங்களை முன்கூட்டியே வெளியிடும் நடைமுறை விரைவில் அறிமுகப்படுத்தப்படுமென சிறிலங்காவின் அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடருக்கு இணையாக நடைபெற்ற கடல்சார் நாடுகளுக்கான 3 ஆவது இந்து – பசுபிக் தீவு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இலங்கையை ஆராய்ச்சி செய்யும் பெயரில் சீனா பல்வேறு உளவுக்கப்பல்களையும் ஆய்வுக்கு கப்பல்களையும் இந்திய கடல் எல்லைக்கு அனுப்பி வைக்கின்றது. அந்தவகையில் தற்போது ஷி யான்- 6 என்ற கண்காணிப்பு கப்பலை சீனா இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது.

இது இந்தியாவிற்கு பாரிய அச்சுறுத்தலாக அமைவதால் இந்தியா இலங்கைக்கு கடும் அழுத்தங்களை கொடுத்து வருகின்றது.

இந்த நிலையில், இலங்கைக்கு வரும் வெளிநாட்டு கப்பல்கள் நங்கூரமிடப்படும் துறைமுகங்களில் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டுதல்களை அரசாங்கம் முன்கூட்டியே வெளியிடவுள்ளதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கையில் நிறுத்தப்படும் வெளிநாட்டு விமானங்கள் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான வழிகாட்டுதல்களும் இந்த நிலையான செயல்பாட்டு நடைமுறையின் மூலம் அறிமுகப்படுத்தப்படுமென அவர் கூறியுள்ளார்.

அதேவேளை, இந்த செயல்முறை தொடர்பான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் விரைவில் குறித்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும் எனவும் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட உயர்மட்ட அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்குள் எந்த வகையான வெளிநாட்டு கப்பல்கள் மற்றும் விமானங்கள் நுழைய முடியும் மற்றும் அவை எத்தனை நாட்கள் இலங்கைக்குள் இருக்க முடியுமென்பது குறித்த விடயங்கள் இந்த நிலையான செயல்பாட்டு நடைமுறையில் குறிப்பிடப்பட்டிருக்கும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

அத்துடன், சீனாவின் கப்பல் இலங்கை துறைமுகத்தை சென்றடைவது குறித்து இந்தியா கரிசனைகளை வெளியிட்டுள்ள நிலையில், இவற்றை கருத்தில் கொண்டு குறித்த நிலையான செயல்பாட்டு நடைமுறை தயாரிக்கப்படுமென அவர் உறுதியளித்துள்ளார்.

இந்தநிலையில், கடந்த வருடம் சீனாவின் உளவு கப்பலான யுவன் வாங் 5 (yuan wang 5) இலங்கையில் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியமை குறிப்பிடத்த்க்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button