News
மீண்டும் குறைக்கப்படும் கோழி இறைச்சியின் விலை
விரைவில் கோழி இறைச்சி மற்றும் நெத்தலி ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதன்படி அடுத்த வாரத்திற்குள் ஒரு கிலோ நெத்தலியின் விலை 200 ரூபா முதல் 250ரூபா வரையில் குறைக்கப்படவுள்ளது.
இதேவேளை, 1250 ரூபா வரையில் தற்போது விற்பனை செய்யப்படும் கோழி இறைச்சியின் விலையை டிசம்பர் மாதமளவில் 850 ரூபாவுக்கு விற்பனை செய்ய முடியும் என எதிர்ப்பார்ப்பதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் கோழி இறைச்சி, முட்டை, கருவாடு மற்றும் மீனின் விலைகள் அதிகரித்திருந்தமையால், நாட்டில் போஷாக்கு தொடர்பான பிரச்சினை ஏற்பட்டதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.