டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்: இன்றைய நாணயமாற்று வீதம்
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 323 ரூபா 51 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 333 ரூபா 70 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 403 ரூபா 02 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 418 ரூபா 99 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 351 ரூபாய் 10 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 365 ரூபாய் 68 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 234 ரூபாய் 81 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 245 ரூபாய் 55 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 210 ரூபாய் 41 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 220 ரூபாய் 79 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 210 ரூபாய் 33 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 220 ரூபாய் 69 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
அதேபோல் இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளும் டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகளை வெளியிட்டுள்ளன.
அதன்படி மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 322.66 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 333.90 ரூபாயாகவும் மாறாமலுள்ளது.
கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 321.23 ரூபாயிலிருந்து 322.24 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 332.25 ரூபாயிலிருந்து 332.50 ரூபாயாக அதிகரித்துள்ளது.
சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே 324 ரூபாய் மற்றும் 334 ரூபாயாக மாறாமலுள்ளமை குறிப்பிடத்தக்கது.