News
குறைந்த வருமானம் கொண்ட நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சி
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளுக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் ஜனவரி மாதம் மீண்டும் கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
கேகாலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த முறை உரியவாறு விண்ணப்பங்களை அனுப்ப முடியாத தரப்பினர் தொடர்பில் கவனம் செலுத்தி ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய மீண்டும் விண்ணப்பங்களை கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போது இதன் முதற்கட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளோம். அப்போது நாம் எதிர்கொண்ட நடைமுறைச் சிக்கல்களை அறிந்து கொண்டிருக்கின்றோம்.