News

பணிப்புறக்கணிப்பில் சுகாதாரத்துறை: வைத்தியசாலைகளில் குவிக்கப்பட்ட முப்படையினர்

இலங்கையில் சுகாதார சேவையில் உள்ள வைத்தியர்கள் தவிர்ந்த 72 தொழிற்சங்கங்கள் இன்று (16) அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் வைத்தியசாலைகளுக்கு முப்படையினர் வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி இன்று காலை 06.30 மணி முதல் 24 மணித்தியாலங்களுக்கு இந்த பணிப்புறக்கணிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.

வைத்தியர்களுக்கு வழங்கப்படும் 35,000 ரூபா கொடுப்பனவை தங்களுக்கும் வழங்குமாறு கோரி தொழிற்சங்கங்கள் இந்த நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றன.

அத்துடன் அத்தியாவசிய நடவடிக்கைகளை மாத்திரம் முன்னெடுக்க சுகாதார சங்கங்களும் தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

எனினும் இன்று காலை சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்களை கலந்துரையாடலுக்கு அழைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், சுகாதார தொழிற்சங்கங்களுக்கு தேவையற்ற அழுத்தங்களை வழங்கினால், வேலை நிறுத்தம் தொடரும் என சுகாதார வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வைத்தியசாலைகளில் முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பு காரணமாக நோயாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்ப்பதற்காக நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளுக்கு முப்படையினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் கோரிக்கைக்கு அமையவே முப்படையினரும் வைத்தியசாலைகளுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button