தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்.!
தங்கத்தின் விலை உலக சந்தையில் நாளுக்கு நாள் ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.
இதனால் இன்று இலங்கையிலும் தங்கத்தின் விலை சடுதியாக குறைவடைந்துள்ளது. முன்னைய தினங்களுடன் ஒப்பிடும் போதே தங்கத்தின் விலையில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கையில் இன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின்(ounce) விலை 647,189 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இன்றைய நிலவரத்தின்படி, 24 கரட் தங்க கிராம்(24 karat gold 1 grams)22,830 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 182,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 20,930 ரூபாவாக பதிவாகியுள்ளது.
22 கரட் தங்கப் பவுண்( 22 karat gold 8 grams) 167,450 ரூபாவாக பதிவாகியுள்ளது.
1 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை(21 karat gold 1 grams)19,980 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண்(21 karat gold 8 grams)இன்றையதினம் 159,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.
எனினும் தங்க ஆபரணங்களின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.