News
தேர்தல் விவகாரம்: உயர் அதிகாரிகள் மீது எஸ்ஜேபி வழக்குப்பதிவு
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பாக நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் ஏனைய அதிகாரிகளுக்கு எதிராக இலங்கை உச்ச நீதிமன்றத்தில் சமகி ஜன பலவேகய (SJB) அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்துள்ளது.
SJB பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் இன்று இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல் மக்களின் அடிப்படை உரிமைகளை நிதிச் செயலாளரும் ஏனைய அதிகாரிகளும் மீறுவதாக உத்தரவு பிறப்பிக்குமாறு SJB நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.