Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

கல்வி அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

நாட்டிலுள்ள அனைத்து சிரேஷ்ட பாடசாலைகளுக்கும் இணைய வசதிகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக என பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.

2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற விவாதத்தில் இன்று (09.07.2025) கலந்து உரையாற்றிய போதே பிரதமர் ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 1000 பாடசாலைகளுக்கு பிற தகவல் தொழில்நுட்ப உபகரணங்களை வழங்க முன்மொழியப்பட்டுள்ளது.

இதற்காக அமைச்சரவை அனுமதியும் பெறப்பட்டுள்ளது. இதுவரை, 1500 பாடசாலைகளுக்கு 1900 ஸ்மார்ட் போர்டுகள் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கிளீன் சிறிலங்கா திட்டத்தின் கீழ் இலங்கை விமானப்படையின் தொழில்நுட்ப உதவியுடன் கல்வித் துறையின் அனைத்து நிலைகளையும் உள்ளடக்கிய ஒரு தேசிய கல்வி முகாமை அமைப்பை உருவாக்குவதற்கான ஆரம்பப் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.

2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் அனைத்து இடைநிலைப் பாடசாலைகளுக்கும் இணைய வசதிகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாடசாலைகளுக்கு 5,000 ரூபா வரம்பற்ற தரவு தொகுப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பின்தங்கிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளின் முன்னேற்றத்தை உறுதி செய்யும் வகையில் அவற்றுக்கான அதிக நிதி உதவி ஒதுக்கீடு பெறுவது அவசியமாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button