Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

நாளை முதல் புதிய விலைகளில் நெல் கொள்வனவு

நெல்லை கொள்வனவு செய்ய நாளை முதல் (03) நெல் சந்தைப்படுத்தல் சபை தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, நாளைய தினம் முதல் புதிய விலைகளில் நெல் சந்தைப்படுத்தல் சபை நெல்லை கொள்வனவு செய்யும் என விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

இதன்படி, 1 கிலோகிராம் நாடு நெல் வகை – ரூபாய் 120 ஆகவும் கொள்வனவு செய்யப்படவுள்ளது.

1 கிலோகிராம் சம்பா – ரூபாய் 125 ஆகவும் 1 கிலோகிராம் கீரி சம்பா – ரூபாய் 132ஆகவும் கொள்வனவு செய்யப்படவுள்ளது.

இதேவேளை, மண்எண்ணெய் விலை அதிகரித்துள்ள நிலையில் தற்போது உரங்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி உலக சந்தையில் உர விலைகள் அதிகரித்துள்ளதாகவும், அதனால் உர விலையில் சில அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தேசிய உரச் செயலகத்தின் பணிப்பாளர் சந்தன லொக்குஹேவகே தெரிவித்துள்ளார்.

ஒரு மெட்ரிக் தொன் யூரியா முன்பு சுமார் 425 அமெரிக்க டொலர்களாக இருந்த நிலையில், தற்போது அது 450 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button