Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு: தொடருந்து பயணிகளுக்கு நற்செய்தி

பதவி உயர்வு உள்ளிட்ட பல பிரச்சினைகள் தொடர்பாக இன்று (19) நள்ளிரவு முதல் ஆரம்பிக்க இருந்த தொடருந்து கட்டுப்பாட்டாளர்களின் 48 மணி நேர வேலைநிறுத்தம் இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சகத்துடன் சுமார் 3 மணி நேரம் நீடித்த கலந்துரையாடலுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று தொடருந்து கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

தொடருந்து கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் அடையாள வேலை நிறுத்தத்தை ஆரம்பிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

குறிப்பாக பதவி உயர்வு உள்ளிட்ட பல பிரச்சனைகளை முன்வைத்தே இந்த போராட்டம் இடம்பெற உள்ளது.

குறித்த விடயத்தை தொடருந்து கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் செயலாளர் கே.டி. துமிந்த பிரசாத் (K.T. Duminda Prasad) தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், தொடருந்து கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் இன்று (19) நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது.

இன்று (19) காலை தொடருந்து அதிகாரிகளுடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலைத் தொடர்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படவுள்ளதாக சங்கத்தின் செயலாளர் கே.டி. துமிந்த பிரசாத் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button