News
மேலும் பல பொருட்களின் விலை குறைப்பு..!
இன்று (16) முதல் அமுலுக்கு வரும் வகையில் லங்கா சதொச மேலும் 6 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.
ஒரு கிலோ உருளைக்கிழங்கு 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 375 ரூபாவாகும்.
ஒரு கிலோ பெரிய வெங்காயம் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 149 ரூபாவாகும்.
இறக்குமதி செய்யப்படும் சம்பா அரிசி ஒரு கிலோ 7 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 198 ரூபாவாகும்.
ஒரு கிலோ சிவப்பு பருப்பும் 7 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 358 ரூபாவாகும்.
ஒரு கிலோ உள்ளூர் சிவப்பு அரிசி 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 164 ரூபாவாகும்.
இறக்குமதி செய்யப்படும் வெள்ளை அரிசி ஒரு கிலோ 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 179 ரூபாவாகும்