மருத்துவமனைகளுக்கு டீசல் வழங்க 46 மில்லியன் டொலர்கள் நன்கொடை
நாடளாவிய ரீதியில் உள்ள அரச மருத்துவமனைகளுக்கு டீசல் வழங்குவதற்காக ஜப்பானிய அரசாங்கம் 46 மில்லியன் டொலர்களை மனிதாபிமான நன்கொடையாக வழங்கியுள்ளது.
இது தொடர்பான ஒப்பந்தம், கைச்சாத்திடும் நிகழ்வு இன்று (22) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முன்னிலையில் இடம்பெற்றது.
நிதியமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன மற்றும் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் Misukoshi Hideaki ஆகியோர் இன்று (22) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் இது தொடர்பான ஆவணங்களை ஜனாதிபதி செயலகத்தில் பரிமாறிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது
இந்த உடன்படிக்கையின் பிரகாரம் ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு 20 மில்லியன் லீற்றர் டீசலை வழங்கவுள்ளதாகவும் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமையில் இலங்கையில் மருத்துவ சேவைகளை இலகுபடுத்தும் நோக்கில் இந்த மனிதாபிமான உதவி மேற்கொள்ளப்பட்டுள்ளது.