இன்றைய வானிலை 2023.02.24
மத்திய, சப்ரகமுவ,மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
கடல் பிராந்தியங்களில்
**********
பொத்துவில் தொடக்கம் மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 – 30 km வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும்.
மன்னார் தொடக்கம் புத்தளம் ஊடாக கொழும்பு வரையான அத்துடன் காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும்.
மன்னார் தொடக்கம் புத்தளம், கொழும்பு,காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்யக்கின்ற வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.
கலாநிதி மொஹமட் சாலிஹீன்,
சிரேஸ்ட வானிலை அதிகாரி.