விமல் வீரவன்சவை கைது செய்யுமாறு பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு!
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மற்றும் 07 பேருக்கு எதிராக கறுவாத்தோட்டம் காவல்துறையினரால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இன்று (13) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இளவரசர் அல் ஹுசைன் இலங்கை வந்தபோது பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடயம் தொடர்பில் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நீதிமன்றில் முன்னிலையாகத் தவறியமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நாட்டிற்கு வந்திருந்த சமயம், இவ்வாறு ஆர்ப்பாட்டம் மேற்கொண்டதாக காவல்துறையினர் நீதிமன்றில் தெரிவித்திருந்தனர்.
குறித்த முறைப்பாட்டில், விமல் வீரவங்ச, ஜயந்த சமரவீர, வீரகுமார திஸாநாயக்க, ரொஜர் செனவிரத்ன, மொஹமட் முஸம்மில், பியசிறி விஜேநாயக்க ஆகிய 7 பேர் சந்தேகநபர்களாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.