கைவிரித்தது தேர்தல் ஆணைக்குழு – வாய்ப்பே இல்லையென அறிவிப்பு!
உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதென்றால், பணம் மற்றும் தொடர்புடைய அமைப்புகளின் ஆதரவின்றி தேர்தல் ஆணையத்தால் மட்டும் தேர்தல் நடத்த முடியாது எனஆணைக்கழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறுமா இல்லையா என்பது எனக்கும் பிரச்சினையாகவே உள்ளது. தேர்தலை நடத்துவதற்கு பணத்தை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
ஆகவே அரசாங்கத்தால் கொடுக்கப்படும் பணத்தை பொறுத்தே ஏனைய செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும்.
இதற்கிடையில், பணம் இல்லாததால், வாக்குச்சீட்டு அச்சடிக்க முடியாது என அச்சகம் தெரிவித்துள்ளது.
ஆகவே தபால் மூல வாக்குச்சீட்டு குறித்து, ஆணைக்குழு கூடி முடிவெடுக்க வேண்டும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.