உள்ளூராட்சி நிறுவனங்களின் புதிய பதவிக் காலம் குறித்து வெளியான தகவல்!
உள்ளூராட்சி நிறுவனங்களின் புதிய பதவிக் காலத்தை அறிவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணைக்குழு மற்றும் அமைச்சக அதிகாரிகளுடன் நடத்திய பேச்சு வார்த்தைக்குப் பிறகு புதிய பதவிக்காலம் அறிவிக்கப்படும் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.
மேலும், உள்ளூராட்சி உறுப்பினர்கள் பயன்படுத்தும் அனைத்து பொதுச் சொத்துகளும் மார்ச் 19ஆம் திகதிக்கு முன்னர் அரசிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர கூறியதாவது, உள்ளூராட்சி நிறுவனங்களின் பதவிக்காலம் மார்ச் 19ஆம் திகதி நள்ளிரவு முதல் நிறுத்தப்படும். அத்துடன், நிர்வாகம் நகர ஆணையாளர்கள் மற்றும் பிரதேச சபை செயலாளர்களின் கீழ் வரும் எனவும் வக்கும்புர தெரிவித்துள்ளார்.
மார்ச் 19ஆம் திகதிக்குப் பின்னர் உள்ளூராட்சி நிறுவனங்களால் சீர்திருத்த நடவடிக்கைகளை மாத்திரமே மேற்கொள்ள முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.