News

இலங்கை சீனித் தொழிற்சாலையின் ஊழியர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு

இலங்கை சீனித் தொழிற்சாலையின் ஊழியர்களுக்கு சிங்களப் புத்தாண்டில் பெருந்தொகை ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

இலங்கை சீனி உற்பத்தி நிறுவனத்தின் கீழ் பெல்வத்த மற்றும் செவனகல தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அவற்றில் மொத்தமாக சுமார் ஐயாயிரத்து ஐநூறு ஊழியர்கள் அளவில் தொழில் செய்கின்றனர்.

இந்நிலையில் கடந்த சில வருடங்களாக சீனி உற்பத்தி நிறுவனம் பெரும் இலாபமீட்டியுள்ளது. அதன் காரணமாக அதன் ஊழியர்களுக்கு சிங்களப் புத்தாண்டு காலத்தில் ஊக்குவிப்புக் கொடுப்பனவு ஒன்றை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சீனித் தொழிற்சாலையின் ஊழியர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு | Incentive Allowance To Employees Of Sugar Factory

அதன் பிரகாரம் பெலவத்தை சீனித் தொழிற்சாலையின் 4423 தொழிலாளர்களுக்கு தலா 45 ஆயிரம் வீதமும், செவனகல தொழிற்சாலையின் ஊழியர்கள் 1100 பேருக்கு தலா 95 ஆயிரம் வீதமும் மொத்தமாக 30 கோடி 35லட்சத்தி 35 ஆயிரம் ரூபா ஊக்குவிப்புக் கொடுப்பனவாக வழங்கப்படவுள்ளது.

அதே போன்று நிறுவனத்தின் உற்பத்திக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு அவர்கள் வழங்கிய கரும்பு ஒரு தொன்னுக்கு முன்னூறு ரூபா வீதம் ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. அதற்காக சுமார் எட்டுக் கோடி ரூபா செலவிடப்படவுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button