இலங்கை உள்ளிட்ட சில நாடுகளின் நிலைமைகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முடிவு
இலங்கை உள்ளிட்ட மேலும் சில நாடுகளின் நிலைமைகளை ஆராய்ந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழு, தமது முடிவுகளை வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கு மேலதிகமாக, எகிப்து, பனாமா, பெரு, துர்க்மெனிஸ்தான் மற்றும் ஜாம்பியா ஆகிய நாடுகள் தொடர்பான நிலைப்பாடும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி இலங்கையில், 12 மாதங்களுக்கு ஒருவரை தடுத்து வைக்கக்கூடிய பயங்கரவாதச்சட்டம், அரசாங்க எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினர், தமிழ் மற்றும் முஸ்லிம்கள், தன்னிச்சையாக கைது செய்யப்படுதல் மற்றும் தடுத்து வைத்தல் என்பன தொடர்பில் மனித உரிமைகள் குழு, கரிசனை வெளியிட்டுள்ளது.
இந்தநிலையில் தன்னிச்சையான கைதுகள் மற்றும் தடுப்புக்காவல் குற்றச்சாட்டுகள் மற்றும் கைதிகளுக்கான அடிப்படை சட்டப் பாதுகாப்புகளை மதித்தல் போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் விரைவான மற்றும் பயனுள்ள விசாரணைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழு அழைப்பு விடுத்துள்ளது.