உலகக் கோப்பையின் பின் புதிய சாதனை படைத்த லியோனல் மெஸ்ஸி..!
பனாமா அணிக்கு எதிரான போட்டியில் கோல் அடித்ததன் மூலம் ஆர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி 800 கோல்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
வெள்ளிக்கிழமை பனாமா அணிக்கு எதிரான போட்டி, ஆர்ஜென்டினாவில் உள்ள நினைவுச்சின்ன மைதானத்தில் நடைபெற்றது.
கடந்த ஆண்டு கத்தாரில் நடைபெற்ற பிபா உலகக் கோப்பையை வென்ற பிறகு, ஆர்ஜென்டினா அணி விளையாடும் முதல் சர்வதேசப் போட்டி இதுவாகும்.
இந்த போட்டியில் கோல் அடித்ததன் மூலம் ஆர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி 800 கோல்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
35 வயதான மெஸ்ஸி ஆட்டத்தின் 88வது நிமிடத்தில் ஃப்ரீ-கிக் கோல் மூலம் இந்த சாதனையை செய்துள்ளார்.
இந்த போட்டியில் பனாமா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஆர்ஜென்டினா அணி வெற்றி பதிவு செய்துள்ளது.
பிரீமியர் லீக்கில் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடிய போது அர்செனல்-க்கு எதிராக இரண்டு கோல்களை அடித்ததன் மூலம், கிறிஸ்டியானோ ரொனால்டோ 800 கோல்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.
தற்போது கிறிஸ்டியானோ ரொனால்டோவை தொடர்ந்து ஆர்ஜென்டினா வீரர் மெஸ்ஸி-யும் இரண்டாவது வீரராக இந்த சாதனையை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.