News

டொலரின் வீழ்ச்சியும் தங்கத்தின் விலை உயர்வும்!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.

இந்தநிலையில், நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றையதினம் ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி அடைந்துள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 333.49 ரூபாவாகவும், கொள்வனவு விலை 315.70 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 363.13 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 343.05 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 412.24 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 389.91 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதேவேளை, இலங்கையின் இன்று (29-03-2023) தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 636,551.00 ஆகும்.

Gold Ounce Rs. 636,551.00
24 Carat 1 Gram Rs. 22,460.00
24 Carat 8 Grams ( 1 Pawn ) Rs. 179,650.00
22 Carat 1 Gram Rs. 20,590.00
22 Carat 8 Grams ( 1 Pawn ) Rs. 164,750.00
21 Carat 1 Gram Rs. 19,660.00
21 Carat 8 Grams ( 1 Pawn ) Rs. 157,250.00

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button