வருட இறுதிக்குள் இலங்கையில் ஏற்படவுள்ள மாற்றம்!
அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களினால் இந்த வருட இறுதிக்குள் இலங்கையானது குறைந்த பண வீக்கத்தை கொண்ட நாடாக முன் னேற்றம் அடையும் என்றும் அத்துடன் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் கணிசமான அளவில் குறைவடையும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் படிப்படியாக குறைவடையும் என தெரிவித்துள்ள அவர், வருட இறுதிக்குள் மக்கள் பல்வேறு சலுகைகளை அனுபவிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
அதிக பணவீக்கத்தைக் கொண்ட நாடுகளில் இலங்கை தற்போது இருபதாவது இடத்தில் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ள அவர், இந்த வருட இறுதிக்குள் குறைந்த பண வீக்கத்தைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இலங்கை திகழும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்னர் உலகின் மூன்றாவது அதிக பண வீக்கத்தைக் கொண்ட நாடாக இலங்கை காணப்பட் டது எனினும் அந்த வரிசையில் இலங்கை தற்போது இருபதாவது இடத்தைப் பிடித்துள்ளது. இலங்கையை மிகக் குறைந்த பண வீக்கத்தை கொண்ட நாடாக மாற்றுவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் அதற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகவும் அண்மையில் அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் முதற்கட்ட உதவி நாட்டுக்கு கிடைத்துள்ள நிலையில் எரிபொருள் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசியப் பொருட் களின் விலைகள் படிப்படியாக குறைவடையும் என்றும் இந்த வருட இறுதிக்குள் மக்கள் சில சலுகைகளை அனுபவிக்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.