மெஸ்ஸியின் மற்றுமொரு சாதனை – தேசிய அணிக்காக 100 கோல் அடித்த முதல் வீரர்!
உலக காற்பந்து நட்சத்திரமும், ஆர்ஜென்டினா அணியின் தலைவருமான லயனல் மெஸ்ஸி மற்றுமொரு சாதனையை படைத்துள்ளார்.
ஆர்ஜென்டினா தேசிய அணிக்காக 100 கோல்கள் அடித்த முதல் வீரர் எனும் சாதனையை மெஸ்ஸி தனதாக்கியுள்ளார்.
தென் அமெரிக்க நாடான கியூரசா அணியும், ஆர்ஜென்டினா அணியும் மோதிய ஆட்டத்தில் மூன்றாவது கோலை புகுத்தியதன் மூலம் மெஸ்ஸி இந்த சாதனையை படைத்துள்ளார்.
குறித்த ஆட்டத்தில் 7 – 0 எனும் கோல் கணக்கில் ஆர்ஜென்டினா அணி வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியின் பின்னர் இதுவரை ஆர்ஜென்டினா அணிக்காக 102 கோல்களை லயனல் மெஸ்ஸி அடித்துள்ளார்.
ஆர்ஜென்டினா அணிக்காக அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் மெஸ்ஸிக்கு அடுத்தபடியாக 56 கோல்களுடன் கேப்ரியல் படிஸ்டுடாவும், 41 கோல்களுடன் சர்ஜியோ அகீரோவும் உள்ளனர்.
சர்வதேச ரீதியாக தேசிய அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் 122 கோல்களுடன் போர்த்துக்கல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ உள்ளதுடன், அடுத்ததாக 109 கோல்களுடன் ஈரானின் அலி டேய் உள்ளார்.