வெளிநாடு செல்லும் வீட்டு பணிப்பெண்களுக்கான விசேட அறிவிப்பு..!
மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணியாளர்களாக செல்லும் பெண்களுக்கு NVQ (National Vocational Qualifications) சான்றிதழ் இன்று முதல் கட்டாயமாக்கப்படுவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
28 நாள் வதிவிடப் பயிற்சியும் இதற்குள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா குறிப்பிட்டுள்ளார்.
28 நாள் வதிவிடப் பயிற்சியின் பின்னர் வீட்டுப் பணிகளுக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் பெண்கள் மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்பட்டு NVQ மூன்றாம் நிலை சான்றிதழ் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
நிபுணத்துவத்துடனான ஊழியர்களை பணிக்கு அனுப்புவதே இதன் நோக்கமாகும் என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரவித்துள்ளார்.
மேலும், சட்டவிரோதமான வழிகளில் வெளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கைப் பெண் தொழிலாளர்களுக்கு 2023 ஏப்ரல் 1 முதல் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு இல்லங்களில் தங்குமிடம் வழங்கப்பட மாட்டாது என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அண்மையில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.