சுப்பர் ஓவரில் வெற்றி பெற்ற இலங்கை அணி!
போட்டியில் நாணய சுழற்சியை வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன் அடிப்படையில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 196 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
இலங்கை அணி சார்ப்பில் சரித் அசலங்க 67 ஓட்டங்களையும் குசல் பெரேரா ஆட்டமிழக்காமல் 53 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
பந்துவீச்சில் ஜேம்ஸ் நீஷம் 2 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்புக்கு 196 ஓட்டங்களை பெற்றது.
இந்நிலையில் இரு அணிகளும் சமநிலையில் இருந்ததால், சுப்பர் ஓவரில் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது.
முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்து 8 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சுப்பர் ஓவரில் வெற்றிக்கு தேவையான 9 ஓட்டங்களை 3 பந்துகளில் பெற்றுக்கொண்டது.
இலங்கை அணி சுப்பர் ஓவரில் விக்கெட் இழப்பின்றி 3 பந்துகளில் 12 ஓட்டங்களை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.