ஐ.எம்.எப்பின் கடன் கிடைத்தும் இலங்கை பொருளாதாரத்தில் சிக்கல்!
இலங்கையில் 3 பில்லியன் டொலர் சர்வதேச நாணய நிதியக் கடன் திட்டத்தைப் பெற்றதன் பின்னர் சில நிவாரணங்கள் கிடைத்தாலும், கடன் பிரச்சினைகள் தொங்கிக்கொண்டிருப்பதால், நாட்டின் சிக்கலான பொருளாதாரத்தை மாற்றுவதற்கான பாதை பாறையாகவே உள்ளது என சர்வதேச இணையத்தளமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும் தெரிவிக்கையில்,
இந்த நிலையில் 2025ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் 4-6 வீதம் வரையில் பணவீக்கம் குறைவதைக் காண விரும்புவதாகவும், எனவே இலங்கை மத்திய வங்கி அதன் கொள்கை நிலைப்பாட்டை தேவைக்கேற்ப சரிசெய்ய தயாராக இருக்க வேண்டும் என்றும் சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது.
மார்ச் மாதத்தில் விலையில் குறைவு ஏற்பட்டாலும், பணவீக்கம் 50வீதமாக இருந்தது.
இந்த நிலைமை, பணவீக்கம் ஆண்டு இறுதிக்குள் ஒற்றை இலக்கங்களுக்கு கொண்டு வரப்படும் என்ற மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க விடுத்த அறிவிப்பை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது.
இலங்கை ஏப்ரல் இறுதிக்குள் உள்ளூர் மறுசீரமைப்பு மூலோபாயத்தை வெளியிடவுள்ளது.
எனினும் இந்த மறுசீரமைப்பின்போது உள்ளூர் கடன் வழங்குனர்களின் ஈடுபாடு தொடர்பில் தொடர்ந்தும் சிக்கல்கள் உள்ளன.
இலங்கையில் நிதிக் கொள்கை இன்னும் கொஞ்சம் தளர்வாக இருப்பதால், அதிக வட்டி விகிதங்கள், பணவீக்கத்தை எதிர்ப்பதற்கான நம்பகத்தன்மையை குறைத்துள்ளன.
இதேவேளை உலகளாவிய எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் விலை குறைந்துள்ளது.
எனினும் இலங்கையில் இது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று முன்னணி உலக பொருளாதார நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.