News

இலங்கையர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகை!

நீர் கட்டணம் அறிவிடப்படும் படிமுறைகள் தொட்ரபில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அதிகார சபை அறிவித்துள்ளது.

இது தொடர்பில் குறித்த சபையால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், நுகர்வோர் மாதாந்தம் நுகரும் நீரின் அளவின் அடிப்படையில் நீர் கட்டணம் அறவிடப்படுவதுடன், குறித்த கட்டணத்தை 14 நாட்களுக்குள் செலுத்தினால் 1.5. வீத கழிவு வழங்கப்படுகின்றது.

நீர் கட்டணப் பட்டியல் கிடைக்கப்பெற்று 30 நாட்களுக்குள் கட்டணத்தை செலுத்த தவறின், மொத்த நிலுவையில் மேலதிகமாக 2.5. வீதம் அறிவிடப்படும்.

அரச நிறுவனங்களின் நீர் விநியோகத்துக்கான கட்டணம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் அதனை செலுத்துவதற்கு மேலதிகமாக 90 நாட்கள் வழங்கப்படும்.

அவ்வாறு தாமதமின்றி கட்டணத்தை செலுத்தினால் அது தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அதிகார சபையின் முகாமைத்துவத்துக்கு சாதகமான காரணியாக அமையும்.

நுகர்வோருக்கு முன்னறிவித்தல் வழங்கிய பின்னர், அதிகாரமளிக்கப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றியே நீர் துண்டிப்பு இடம்பெறுகின்றது.

தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அதிகார சபையானது, அதிக செலவீனத்தில் சுத்திகரிக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பான குடிநீரை தொடர்ச்சியாக நுகர்வோருக்கு வழங்கிவருகின்றது.

இதற்கான கட்டணம்கூட நியாயமான அடிப்படையிலேயே அறிவிடப்படுகின்றது. சேவைகளை தடையின்றி வழங்குவதற்கு நுகர்வோர் கட்டணத்தை செலுத்த வேண்டியது அத்தியாவசியமானது.

இதேவேளை தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அதிகார சபை தொடர்பில் சில ஊடகங்களில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. அவற்றை முற்றாக நிராகரிக்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button