மற்றுமொரு நெகிழ்ச்சி சம்பவம் – பலரை வாழ வைத்து தன்னுயிரை ஈந்த மாணவன்
மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்ட பதின்ம வயது மாணவனின் உடல் உறுப்புகள் பல நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றுவதற்காக அவரது குடும்ப உறுப்பினர்களின் அனுமதியுடன் தானம் செய்யப்பட்டுள்ளது.
குருநாகல் மலியதேவ கல்லூரியின் உயர்தர மாணவரான பிரவீன் பண்டார, தனது தாய் மற்றும் உடன்பிறந்தவர்களுடன் பயணித்த போது விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார்.
பிரவீனின் தலையில் பலத்த காயம் இருந்ததால், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
இந்த விபத்தில் பிரவீனின் தாயார் உயிரிழந்தார், அவரது உடன்பிறந்தவர் காயம் அடைந்தார்.
மேலும் பல நோயாளிகளைக் காப்பாற்ற பிரவீனின் இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் மற்றும் கருவிழிகளை தானம் செய்ய அந்த இளைஞனின் தந்தை ஒப்புக்கொண்டார்.
இதேவேளை கடந்த வாரம், மூளைச்சாவு அடைந்த ஒரு இளைஞனின் குடும்பத்தினர் மற்ற ஏழு நோயாளிகளைக் காப்பாற்றுவதற்காக அவரது உறுப்புகளை தானம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.