அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லை: சஜித்
அரசாங்கத்தின் மீது நம்பிக்கை கிடையாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை முடக்கிக் கொள்வதென்றால் அது குறித்து அரசாங்கம் எழுத்து மூலம் அறிவிக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலீடாக அறிமுகம் செய்யப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பை வெளியிட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
மக்களின் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் அரசாங்கம் சட்டத்தை முடக்கிக் கொள்வதாக அரசாங்கம் அறிவித்த போதும், அந்த தீர்மானம் தொடர்பில் தமக்கு நம்பிக்கையில்லை என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னரும் மக்களுக்கு எதிரான சட்டங்களை மக்கள் எதிர்ப்பு காரணமாக முடக்கிக் கொண்டு பின்னர் பெரும்பான்மை பலத்தைப் பயன்படுத்தி மீளக் கொண்டு வந்ததாகத் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை மீளப்பெற்றுக் கொள்வதாக இருந்தால் அரசாங்கம் அதனை எழுத்து மூலம் அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டுமென சஜித் கோரியுள்ளார்.
மக்கள் தங்களது உரிமைகளுக்காக போராடுவதனை முடக்கும் வகையில் அரசாங்கம் இந்த சட்டத்தை அறிமுகம் செய்ய முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார்.