News

ஊழியர்கள் பெற்ற கடனால் இரு அரச நிறுவனங்கள் கடுமையான நிதி நெருக்கடியில்…!

இலங்கையின் இரண்டு முக்கிய அரச நிறுவனங்கள் கடுமையான நிதி விளைவுகளை எதிர்கொள்வதாக கணக்காய்வாளர்களின் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

அந்தவகையில், சிலோன் பெற்றோலியம் ஸ்டோரேஜ் டெர்மினல் லிமிடெட் மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆகிய இரு நிறுவனங்களே நிதி நெருக்கடியை சந்தித்துள்ளன.

குறித்த நிறுவனங்களின் ஊழியர்கள் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாததன் விளைவாக இது ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022 ம் ஆண்டு ஆகஸ்ட் இறுதியில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் சுமார் 1,051 பில்லியன் ரூபா திரட்டப்பட்ட இழப்பை காட்டியுள்ளது.

அதேசமயம், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் 2021 இல் செலுத்தவேண்டி மொத்த நிலுவைத் தொகை 3.36 பில்லியன் ரூபாவாகவும், 2022 இல் 4.31 பில்லியன் ரூபாவாகவும் உள்ளது.

கடனைத் மீள செலுத்தும் திறனைப் கவனிக்காமல் பொருத்தமற்ற கடன் திட்டங்களைச் செயல்படுத்தியதன் காரணமாக ஊழியர்கள் கடன் வாங்க சிரமப்பட்டுள்ளனர்.

இதன்காரணமாகவே அந்த நிறுவனங்களின் கூடுதல் நேரச் செலவுகளில் தேவையற்ற அதிகரிப்பை நேரடியாக ஏற்படுத்தியதாக கணக்காய்வாளர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடன் தொடர்பில் முறையான நிதிக் கொள்கை இல்லாமை, ஊழியர்களின் அடிப்படை வருமானம், கடன் தவணை மற்றும் இதர செலவுகளுக்கு போதுமானதாக இல்லாமை காரணங்களாக கூறப்படுகின்றது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் மொத்த ஊழியர்களில் 40 சதவீதத்துக்கும் மேலானவர்களும், ஸ்டோரேஜ் நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்களும் தங்களது அடிப்படைச் சம்பளத்தில் 50 சதவீதத்துக்கு மேல் கூடுதல் நேரம் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

பெற்றோலியக்கூட்டுத்தாபனம் மற்றும் பெற்றோலியம் ஸ்டோரேஜ் டெர்மினல் நிறுவனம் ஆகியவற்றில் 4,200 ஊழியர்கள் காணப்படுகின்றனர்.

இருப்பினும் குறித்த நிறுவனங்களுக்கு 500 பேரின் தேவை மாத்திரமே உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதற்கிடையில் சபுகஸ்கந்தவில் உள்ள பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மேலதிக நேர கொடுப்பனவாக 2021-2022 இல் 3 பில்லியன் ரூபா வழங்கப்படுவதாக கணக்காய்வாளரின் அறிக்கை கூறுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button