News
		
	
	
இலங்கை அரச ஊழியர்களுள் ஒரு சாரார் விடுத்துள்ள கோரிக்கை

10 வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் சனத்தொகை மற்றும் வீடமைப்பு சனத்தொகை கணக்கெடுப்பிற்கு தமது அதிகாரிகளை ஈடுபடுத்துமாறு இலங்கை ஐக்கிய கிராம அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
முன்னுரிமை வழங்க வேண்டும்
சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்திடம் இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்த பணி தமக்கு வழங்கப்பட்டுள்ள அரசியலமைப்பு கடமை என்பதால், தமது அதிகாரிகளுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும், அதற்கு ஏனைய அதிகாரிகளை பயன்படுத்தக் கூடாது எனவும் சங்கத்தின் தலைவர் கமல் கித்சிறி தெரிவித்துள்ளார்.




