இந்தியா – இலங்கைக்கான கப்பல் சேவை குறித்து வெளியான புதிய தகவல்.
இந்தியாவின் காரைக்காலிற்கும், இலங்கையின் யாழ். காங்கேசன்துறைக்கும் இடையிலான கப்பல் சேவை தொடர்பில் புதிய தகவலொன்றை IndSri Ferry Service நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் நிரஞ்சன் நந்தகோபன் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், இந்தியாவின் காரைக்காலுக்கும் யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறைக்கும் இடையிலான கப்பல் சேவையை முன்னெடுப்பதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்த கப்பல் சேவையை எதிர்வரும் மே மாத நடுப்பகுதியில் ஆரம்பிக்கவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னதாக குறித்த கப்பல் சேவை மார்ச் மாதத்தில் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே தற்போது கப்பல் சேவையை முன்னெடுப்பதில் தாமதம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் சில அனுமதிகள் கிடைக்கப்பெறாமையினால் குறித்த கப்பல் சேவையை எதிர்வரும் மே மாத நடுப்பகுதியில் இருந்து முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மேலும், 150 பயணிகள் இந்த கப்பல் சேவையில் ஒரே தடவையில் பயணிக்க முடியும் என்பதுடன், ஒரு வழி கட்டணமாக 50 அமெரிக்க டொலர் அறவிடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.