News

இலங்கையின் இணையவழி வருகை அட்டை முறை அறிமுகம்

இலங்கை அரசாங்கம் இணையவழி வருகை அட்டை முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. வெளிநாட்டுப் பார்வையாளர்கள் இலங்கைக்கு வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக இதனை நிரப்ப முடியும்.

பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம் இலங்கைக்கான தனது ஆலோசனையை புதுப்பித்துள்ள ஆலோசனையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், வெளிநாட்டவர்கள், இலங்கைக்கு வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் பூர்த்தி செய்யக்கூடிய இணையம் மூலமான வருகை அட்டை முறையை அறிமுகப்படுத்தியுள்ளதாக ஆலோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து பயணிகளும் இலங்கை அரசாங்கத்தால் சுற்றுலாப் பயணிகளுக்காக விதிக்கப்பட்ட வழிகாட்டுதல்களுக்கு இணங்க வேண்டும்.

அத்துடன் இலங்கைக்குள் நுழைவதற்கு மின்னணு பயண அங்கீகாரத்திற்கு வருகை அட்டையை இணையத்தின் ஊடாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுவதாக பிரித்தானியா வெளிவிவகார அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான அறிவுறுத்தல்கள் மற்றும் கூடுதல் தகவல்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் இணையத்தளத்தில் பதிவாகியுள்ளன.

ஒன் எரைவல் என்ற வருகைத்தரு விசா வசதிகள் உள்ளபோதும், பயணத்திற்கு முன் வருகை அட்டைக்கு விண்ணப்பிப்பது பயணத்தை எளிதாக்குவதற்கும் வருகையில் தாமதங்களைத் தடுப்பதற்கும் உதவும் என்றும் பிரித்தானிய அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button