ஜனாதிபதி விடுத்த அழைப்பை மறுத்த அரச ஊழியர்கள்
ஜனாதிபதிசெயலகத்தினால் ஏப்ரல் 22ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புத்தாண்டு விழாவில் பங்குபற்றுவதை புறக்கணிக்கவுள்ளதாக அகில இலங்கை சமுர்த்தி முகாமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பி.கே. ரனுக்கே குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,“நாட்டு மக்கள் அவதிப்படும் வேளையில் புத்தாண்டு பண்டிகைக்கு பெருமளவு பணத்தை செலவிட அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சமுர்த்தி திணைக்களத்தின் நிர்வாகம் முகாமையாளர்களுக்கு சில அழுத்தங்களை கொடுத்து அவர்களின் 816 இலட்சம் செலவழித்த வேலைத்திட்டத்தை முன்னரே நடைமுறைப்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளியுள்ளது.
இந்த கோழைத்தனமான செயற்பாடுகளுக்கு சமுர்த்தி முகாமையாளர்கள் அச்சப்படுவதில்லை.
சில அரசியல் அடாவடிகளை பயன்படுத்தியும், முகாமையாளர்களை இடமாற்றம் செய்வதாக அச்சுறுத்தியும் பொய்களை கூறி இந்த செயற்பாட்டை முன்னெடுக்க முற்பட்டால் அது வெறும் மாயை என அகில இலங்கை சமுர்த்தி முகாமையாளர்கள் அனைவரும் வலியுறுத்துகிறோம்.
அதேபோன்று சமுர்த்தி முகாமையாளர்கள் ஏப்ரல் 22ஆம் திகதி புத்தாண்டு விழா புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.”என தெரிவித்துள்ளார்.