News
பெயர் மாற்றப்படும் கொழும்பு தாமரைக்கோபுரம்…!
தெற்காசியாவின் உயரமான கோபுரம் என்ற பெருமையை கொண்டுள்ள கொழும்பு தாமரைக் கோபுரம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்த்த வண்ணம் உள்ளது.
கொழும்பு மத்திய பகுதியில் அமைந்துள்ள இந்த கோபுரத்தின் நிர்மாணப் பணிகள் 2012 ம் ஆண்டு ஜனவரி ஆரம்பிக்கப்பட்டு 2019 ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் திறந்து வைக்கப்பட்டது.
அன்று தொடக்கம் இன்றுவரை கொழும்பு தாமரை கோபுரம் (lotus Tower) எனும் பெயரில் அழைக்கப்படும் இக்கோபுரத்தின் பெயர் தற்போது மாற்றம் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில், தாமரை கோபுரம் என்ற பெயரை நீக்கி கொழும்பு கோபுரம் (Colombo Tower) என மாற்றுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உயரமான கோபுரத்திற்கு தாமரை என்ற பெயர் பொருத்தமானதல்ல என்பதே பெயரை மாற்றக் காரணம் என சொல்லப்படுகின்றது.