News
இலங்கையில் புதிய கல்வி முறை! ரணில் வெளியிட்ட அறிவிப்பு
2048ஆம் ஆண்டளவில் அபிவிருத்தியடைந்த இலங்கையை கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தில் கல்வி தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் 2035ஆம் ஆண்டளவில் நாட்டில் புதிய கல்வி முறையை உருவாக்குவதே அரசாங்கத்தின் அபிலாஷை எனவும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில், எதிர்காலத்தில் கல்வியை நவீனமயப்படுத்துவதற்கு அரசாங்கம் பெருமளவு பணத்தைச் செலவிடத் தயாராக இருப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டின் மிக முக்கியமான தேசிய வளம் இளைஞர்கள் என்றும், எதிர்கால சந்ததியினருக்கு முறையான கல்வியை வழங்குவதன் மூலம் இலங்கையை இந்து சமுத்திரத்தில் பிரதான கேந்திர மையமாக மாற்ற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.