News

வடக்கில் காணியற்ற ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு விரைவில் காணி.

வட மாகாணத்தில் காணி அற்றவர்கள் மற்றும் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட சுமார் ஒரு இலட்சத்து 18 ஆயிரம் குடும்பங்களுக்கு அரச காணிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளின் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், வடமாகாணத்தில் காணி அற்ற வறுமை நிலையில் வாழும் குடும்பங்களுக்கான நன்கொடைக் காணிகள் வழங்கும் செயற்பாடுகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

அதேபோன்று காணி அற்ற அரச உத்தியோகத்தர்களுக்கும் குத்தகைக்கு மற்றும் வீடுகளை கட்டுவதற்கு காணிகள் வழங்கும் செயற்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றது.

வடக்கில் காணியற்ற ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு விரைவில் காணி: ஆளுநர் தெரிவிப்பு | Land For One Lakh Families Soon

வடமாகாணத்தில் சுமார் 4 இலட்சம் மரங்கள் ஒவ்வொன்றிற்கும் 1:5 என்ற விகிதத்தில் மரங்களை நாட்டுவதற்கும் புதிய நீர்த்தேக்கங்களை உருவாக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாது வழங்கப்படும் காணி துண்டுகளில் ஏற்கனவே உள்ள பயன் தரும் மரங்கள் அல்லது காணி துண்டுகளில் நடுகை செய்யும் மரங்களுக்கான இலவச ஆலோசனைகளும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

குறித்த திட்டத்தினை செயல்படுத்துவதற்காக மாகாண அமைச்சுக்களின் அதிகாரிகள் உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச குழுக்கள் இணைந்து பணியாற்றுவதற்கான செயற்றிட்டங்களும் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஆகவே இதன் மூலம் மாகாணத்தில் உள்ள ஒவ்வொரு ஏழைக் குடும்பமும் 10 பேர்ச் அரச காணிக்கு உரிமையாளராக மாறுகின்ற நிலை காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button