News

இலங்கையில் வர்த்தக வங்கிகளில் டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளில் இன்று பதிவாகியுள்ள இலங்கை ரூபாவிற்கு எதிரான டொலரின் பெறுமதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாயின் பெறுமதி பெரும்பாலும் நிலையானதாக உள்ளது.

மக்கள் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலை கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் முறையே 311.59 ரூபா மற்றும் 330.29 ரூபாவாக பதிவாகியுள்ளது.

கொமர்ஷல் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 310.05 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை விற்பனை விலையானது மாறாமல் 327.50 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் சம்பத் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலை கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் முறையே 314 ரூபா மற்றும் 328 ரூபாவாக மாறாமல் உள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button