ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட உயர்வு! விரைவில் நடைமுறைக்கு வரும் கட்டண குறைப்பு
ஜூலை மாதம் மின்சார கட்டணங்கள் குறைக்கப்படும் என நம்புவதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
நிகழ்வொன்றில் கலந்துகொண்டு, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,“மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சும் அரசாங்கமும் இணைந்து ஜூலை மாதம் மின்சார கட்டணத்தை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளமையினால் உற்பத்தி செலவு குறைந்துள்ளது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களில் கவனம் செலுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது, இது மின் உற்பத்திக்கான ஒட்டுமொத்த செலவையும் குறைக்கும்.
எனவே எதிர்வரும் ஜுலை மாதம் மீள்திருத்தத்தின் போது மின்சார கட்டணங்கள் குறைக்கப்படும். மின்சார கட்டணக் குறைப்பு தொழில்துறைகளுக்கு குறிப்பாக தேயிலை தொழிலுக்கு நன்மை பயக்கும்.” என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.