உலகின் சிறந்த விளையாட்டு வீரர் மெஸ்ஸிக்கு கிடைத்த அங்கீகாரம்..!
அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த பிரபல கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்சி உலகின் மிக சிறந்த வீரர்களில் ஒருவர் ஆவார்.
அர்ஜென்டினா அணிக்காக உலக கிண்ணத்தை பெற்று கொடுக்க முடியவில்லை என்ற ஏக்கம் அவருக்கு நீண்ட காலமாக இருந்தது.
மெஸ்சியின் உலக கிண்ணத்தை கனவு கடந்த ஆண்டு நனவானது. இறுதி போட்டியில் பிரான்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றதன் மூலம் அவரது கால்பந்தாட்ட கனவு முழுமையாக நிறைவேறியது.
35 வயாதான மெஸ்சி கடந்த ஆண்டு பிபா உலக கிண்ணத்தை வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தார். இந்நிலையில், லாரஸ் உலகின் சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதை பாரிஸில் நடந்த விழாவில் அர்ஜென்டினா கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸி வென்றுள்ளார்.
அதைபோல லாரஸ் உலகின் சிறந்த அணிக்கான விருது அர்ஜென்டினா கால்பந்தாட்ட அணிக்கு வழங்கப்பட்டுள்ளது.
லாரஸ் விருதை 2-வது முறையாக லியோனல் மெஸ்ஸி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து லியோனல் மெஸ்ஸி தெரிவிக்கையில், ‘இது ஒரு சிறப்பு மரியாதை. அனைத்து அணி வீரர்களுக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன் – நான் தனியாக எதையும் சாதிக்கவில்லை.
லாரஸ் விருதின் சிலையை என் கைகளில் வைத்திருப்பது எனது விளையாட்டு வாழ்க்கையின் மிகப்பெரிய மரியாதைகளில் ஒன்றாகும்’ என தெரிவித்துள்ளார்.