News

நச்சுத் தன்மை கொண்ட தேங்காய் எண்ணெய்! தொடர்பில் பொதுமக்கள் அவதானம்.

நாட்டில் இறக்குமதி செய்யப்படும் நச்சுத் தன்மை கொண்ட தேங்காய் எண்ணெய் உள்நாட்டு வியாபாரிகளினால் விற்பனை செய்யப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

குருநாகல் பகுதியில் இன்றைய தினம் (14.05.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் இந்த குற்றஞ்சாட்டினை முன்வைத்துள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் பிரதான இணைப்பாளர் புத்திக டி சில்வா தெரிவித்துள்ளதாவது, அண்மையில் கண்டு பிடிக்கப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட நச்சுத் தன்மை கொண்ட தேங்காய் எண்ணெய் துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்பட்டமை பிரச்சினைக்குரியதாகும்.

நச்சுத்தன்மை கொண்ட இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் அடங்கிய கொள்கலன் ஒன்று கெக்கிராவ பகுதியில் வைத்து பொதுச் சுகாதார பரிசோதகர்களால் மீட்கப்பட்டுள்ளது.

இலங்கைக்குத் தேங்காய் எண்ணெய்யை இறக்குமதி செய்து வெவ்வேறு இரசாயன திரவங்களைப் பயன்படுத்தி அவற்றைத் தூய்மைப்படுத்தி சந்தைக்கு விடுவிக்கின்றமை தொடர்பில் முன்னதாகவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், குறித்த தேங்காய் எண்ணெய் துறைமுகத்தில் இருந்து எவ்வாறு வெளியேற்றப்பட்டது என்பது தொடர்பில் கேள்வி எழுவதாகவும் புத்திக டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button