மக்களின் ஆணையில் மட்டுமே மீண்டும் மகிந்த பதவிக்கு வருவார்! நாமல் சூளுரை
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவிக்கு நியமிக்கப்படுவது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினரும் அவரது புதல்வருமான நாமல் ராஜபக்ச கருத்து வெளியிட்டுள்ளார்.
தலைமைப் பொறுப்பிலிருந்து விடை கொடுத்த போது மக்களுடன் இருந்த மகிந்த, மக்களின் ஆணையின் அடிப்படையில் மட்டுமே மீண்டும் பதவிக்கு வருவார் என நாமல் தெரிவித்துள்ளார்.
மகிந்த பிரதமராக பதவி ஏற்றுக்கொள்வார் இதனால் கலகம் ஏற்படும் என்ற அடிப்படையில் கொழும்பில்கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது அர்த்தமற்றது என தெரிவித்துள்ளார்.
வீழ்ச்சியடைந்த நாடு சரியான பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ள தருணத்தில் மீண்டும் போராட்டங்களை நடத்துவது பயனற்றது என அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில்கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதனால் நாட்டின் நன்மதிப்புக்கு களங்கம் ஏற்படும் என்பதுடன், சுற்றுலாப் பயணத்துறைக்கு தாக்கம் ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
போராட்டம் நடத்துவதனால் ராஜபக்சர்களும், ரணிலும் விழப் போவதில்லை எனவும் இதனால் ஒட்டுமொத்த நாடே விழும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், நாடாளுமன்றை தீயிட்டு கொளுத்த முயற்சித்தவர்களை கண்டு பிடிக்குமாறு ஜனாதிபதியிடம், நாமல் ராஜபக்ச கோரியுள்ளார்.