இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
வலி நிவாரணி மாத்திரைகளை பயன்படுத்துவது தொடர்பில் இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக காய்ச்சல் ஏற்படும் பொழுது பரசிட்டமோல் தவிர்ந்த வேறு வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொள்ளக் வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நேற்றையதினம், சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் வைத்தியர் உபுல் திஸாநாயக்க குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொள்வதன் மூலம் காய்ச்சல் உள்ள நபரின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும்.
இதனால், நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பொழுது வைத்தியர்களும் இது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும்.
தனியார் மருத்துவ நிறுவனங்களிலுள்ள தகுதியற்ற வைத்தியர்கள் டெங்கு நோயாளர்களுக்கு பரசிட்டமோலுக்கு பதிலாக வேறு வலி நிவாரணி மருந்துகளை வழங்குவதால் நோயாளிகளுக்கு பாதிப்புக்கள் ஏற்படும்.
தகுதி வாய்ந்த வைத்தியர்கள் சிலர் இந்த தவறை செய்வதால் நோயாளர்கள் ஆபத்தை முகங்கொடுக்கின்றனர்.
ஆகவே காய்ச்சலுக்கு மருந்து எடுக்கும் போது பரசிட்டமோலுக்கு பதிலாக வேறு வலி நிவாரணி தரப்பட்டால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.