News

இலங்கையில் கறுப்பு பட்டியலில் சேர்க்கப்படும் கண் சொட்டு மருந்து…!

இலங்கையில் கண் சத்திரசிகிச்சைக்குப் பின்னர் பயன்படுத்தப்படும் ப்ரெட்னிசோலோன் என்ற கண் சொட்டு மருந்தை கறுப்பு பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

முன்னதாக, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ப்ரெட்னிசோலோன் கண் சொட்டு மருந்து (Prednisolone Eye Drops) பல சிக்கல்கள் பதிவாகியதையடுத்து, உடன் நடைமுறைக்கு வரும் வகையில் பயன்படுத்துவதை நிறுத்துமாறு அனைத்து மருத்துவமனை பணிப்பாளர்களுக்கும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இலங்கையில் நடத்தப்பட்ட ஆய்வக சோதனைகள் இந்த கண் சொட்டு மருந்து மாசுபட்டுள்ளது. என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளரான வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த மருந்துப் பொருட்கள் தொடர்பான கொடுப்பனவுகளை செலுத்தாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட Prednisolone Eye Dropsக்குப் பதிலாக மியன்மாரில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்தைப் பயன்படுத்த உள்ள நிலையில் கண் சத்திரசிகிச்சைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button